5 வயது குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால் நீமோ தடுப்பூசியை அதிமுக அரசு செலுத்தவில்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றச்சாட்டு

மா.சுப்ரமணியன்

மூளைக்காய்ச்சல் நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

  • Share this:
ஐந்து வயது குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாத காரணத்தால் நீமோ தடுப்பூசியை அ.தி.மு.க அரசு செலுத்த முன்வராமல் இருந்திருக்கலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டினார். 

சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்,  “ இந்தியாவில் 21 மாநிலங்களில் மட்டுமே நீமோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த தடுப்பூசியை கடந்த வாரம் தான் செலுத்த துவங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் இந்த நீமோ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் ஒன்பது லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 3 மையங்களில் இந்த பணி துவங்கி உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இதற்கான மையங்கள் திறக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூளைக்காய்ச்சல் நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த நோய்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். எனவே விரைவில் படிப்படியாகச்  செலுத்தப்படும்.தனியார் மருத்துவமனையில் இந்த தடுப்பூசியை 3 தவணையாக செலுத்த வேண்டுமென்றால் 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதை அரசு முழுமையாக இலவசமாக செலுத்தும்.” என்றார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Yuvaraj V
First published: