Home /News /tamil-nadu /

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி: தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவில்லை: நீதிமன்றம் அதிருப்தி

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி: தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவில்லை: நீதிமன்றம் அதிருப்தி

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை தெளிவற்ற முறையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளில் பலவகையினர் இருப்பதாகவும், அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என எந்த தகவலும் இல்லை எனவும், அரசின் அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

    மேலும், சென்னையில் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

    Also read: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் உயிரிழப்பு!!

    பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai High court, CoronaVirus, Covid-19 vaccine

    அடுத்த செய்தி