சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி செலுத்தப்படும் - மாநகராட்சி அறிவிப்பு

தடுப்பூசி

 • Share this:
  சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன, இந்நிலையில், நேற்று 8 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன, இதையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 45 தடுப்பூசி மையங்களிலும் இன்று தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.

  ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் 200 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், 70 தடுப்பூசிகள் இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கும்,130 தடுப்பூசிகள் நேரடியாக வருவோருக்கும் செலுத்தப்பட உள்ளன, அதேசமயம், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என, சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  அதேசமயம், தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் சேலம் மாவட்டம் முழுவதிலும், கோவை மாநகராட்சியிலும், இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தடுப்பூசி பற்றாக்குறையால் தொடர்ந்து நான்காவது நாளாக, கரூரில் இன்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: