Home /News /tamil-nadu /

Vaccination : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி

Vaccination : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தமிழ்நாட்டிற்கு சுமார் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி தொற்று உறுதியாகும் விகிதம் 10.2 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 2வது அலை உச்சத்தில் இருந்தபோது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனா அல்லாத நோயாளிகள் 300 முதல் 400 பேர் மட்டும் சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் பிற அறுவை சிகிச்சைகளையும் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், 3-வது அலை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.

தொற்று பரவல் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில் வீடு வீடாக காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 2,272 தொற்றாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதுடன், தொற்று பரவலும் தடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறங்களில் பதிவாகி வரும் நிலையில், கிராமப்புறங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளதாகவும், வரும் வாரத்தில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ள தெருக்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் கேட்டபோது முறையான விளக்கம் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடால் தொடர்ந்து 4வது நாளாக தடுப்பூசி போடும் பணி முடங்கியுள்ளது. சென்னையில் 1,060 தடுப்பூச்கள் மட்டும் கையிருப்பு இருந்த நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தவிர 36 மாவட்டங்களிலும் தடுப்பூசி போடப்படவில்லை.

இதனிடையே, ஹைதராபாத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு நேரிடையாக கொள்முதல் செய்த 85,000 கோவேக்சின் டோஸ்கள் சென்னை வந்தடைந்தன. இதேபோன்று மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முன்னிரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசிகள பிரித்து வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாம் என அதிகாரிகள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

Must Read : ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறையாத கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடைபயிற்சி, தேநீர் கடைகளுக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் செயல்படும் நேரங்களும் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published by:Suresh V
First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19 vaccine, Vaccination

அடுத்த செய்தி