தமிழகத்தில் ஜனவரி மூன்றாம் தேதி, 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கிண்டி கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 6 லட்சத்து 18 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாக உள்ளதென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்புகளை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 136 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிகிக்கை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 1520 ஆக்சிஜன் படுக்கைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 50 படுக்கை வசதி உள்ளது. அங்கு சிறப்பு வார்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்திற்கு சென்ற ஸ்டாலின், ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்கு, ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டார். அங்கு மீண்டும் அமைக்கப்பட்ட கொரோனா கட்டளை மையத்தையும் திறந்து வைத்தார். கட்டளை மையத்தின் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
இதனிடையே சென்னை கல்லூரி வளாகத்தில் கலாசார, விளையாட்டு விழா போன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதி வழங்க கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க கல்லூரி விடுதிகள் மற்றும் உணவகங்களில் பேப்பர் தட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Must Read : ஒமைக்ரானுக்கு மத்தியில் தமிழக சுகதாரத் துறையினருக்கு புதிய சவால்
உணவு அருந்தும் இடங்களில் மாணவர்களை மொத்தமாக அனுமதிக்காமல் பகுதி, பகுதியாக அனுமதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, 18 வயது நிரம்பியவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது என்பகு குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine, MK Stalin, Omicron