3வது அலைக்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி: தமிழக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் மருத்துவ உதவிக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் நியமனம் மற்றும் அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்

கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் மருத்துவ உதவிக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் நியமனம் மற்றும் அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்

  • Share this:
    திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் அம்மா கபசுர குடிநீர் திட்டத்தின் மூலம் 7வது நாள் கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது தென்மேற்கு பருவ மழை துவங்கியிருக்கிறது, இந்த காலகட்டத்தில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் கிடைக்கும் உபரி நீரை சேமித்து வைக்கும் விதமாக அணைகளின் பாதுகாப்பு நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    தோப்பூரில் புதிதாக தொடங்கப்படும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் மருத்துவ உதவிக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் நியமனம் மற்றும் அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்.

    மருத்துவ கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக புதிய யுக்திகளை கையாள வேண்டும் என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோளாக விடுத்துள்ளது, அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் அறிவித்தார்.  எனவே மூன்றாவது அலை வருவதற்கு முன்பாகவே அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். இன்று மதுரையில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் கிராமப்புறங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கிராமப்புறங்களில் காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து பருவ மழை தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மதுரையில் முதல்வர் நடத்தும் ஆய்வு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக் குறையை சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    திருமங்கலம் செய்தியாளர் சிவக்குமார்
    Published by:Arun
    First published: