Home /News /tamil-nadu /

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை - தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை - தெற்கு ரயில்வே

மாதிரி படம்

மாதிரி படம்

புறநகர் ரயில்களில் வழக்கம்போல் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ்கள் அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றும், ஒமைக்ரான் தொற்றும் பரவிவருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து, ரயில்வே நிர்வாகமும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

    அதன்படி, சென்னையில் புறநகர் ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க: மும்பை சேரி டூ மைக்ரோசாப்ட்... பெண்ணின் தன்னம்பிக்கை பயணம்.. வைரலாகும் வாழ்க்கை கதை!

    இந்த நிலையில் பிப் 1.ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 27.01.22ம் தேதி தமிழக அரசு விதித்த கொரோனா பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்ப பெற்றப்பட்டதை தொடர்ந்து, புறநகர் ரயில்களில் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை வரும் பிப்.1ம் தேதி முதல் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பிப் 1.ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்கும் போது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், புறநகர் ரயிலுக்கான UTS மொபைல் செயலி சேவையும் இனி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் ரயில்களில் வழக்கம்போல் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : மனைவியின் அக்கா உட்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் சிறையிலடைப்பு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Electric Train

    அடுத்த செய்தி