Home /News /tamil-nadu /

தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும்? சென்னை ஆய்வில் கிடைத்த தகவல்

தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும்? சென்னை ஆய்வில் கிடைத்த தகவல்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா உருமாறி கொரோனாவால் தீவிர பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது என சென்னையில் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாமல் இருந்தாலும் டெல்டா உருமாறிய கொரோனா  பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்களில் நோய் தீவிரமடைவதும், இறப்பு ஏற்படுவதும் தடுப்பூசி போட்டிருந்தால் குறைவாக உள்ளது.

சென்னை மாநகராட்சியின் மூன்று மையங்களில்( triaging centre - நோயாளிகளின் நோய் தன்மை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தும் மையம்)  இருந்து ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்த்த 224  பேர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய 104 பேர், தடுப்பூசி செலுத்தாத 176 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 176 நபர்களில் 7 பேர் அதாவது 4% பேர் உயிரிழந்து விட்டனர். ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திய 224 பேரில் 3 பேர் அதாவது 1.3% பேர் உயிரிழந்து விட்டனர்.  இரண்டு டோஸ்  தடுப்பூசி செலுத்திக் கொண்ட 104 பேரில் யாரும் உயிரிழக்கவில்லை.

அதே போன்று தடுப்பூசி போட்டவர்களுக்கு நோயின் தீவிரத்தன்மை குறைவாக இருந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 176 நபர்களில் முப்பத்தி நான்கு பேருக்கு ஆக்சிஜன் அளவு 94 க்கும் கீழ் இருந்தது. அதாவது 19.3 சதவிகிதம் பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி


தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்திய 224 பேரில் நாற்பத்தி ஆறு பேருக்கு ஆக்சிஜன் அளவு 94 க்கும் கீழ் இருந்தது. அதாவது 20.5 சதவீதம் பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டது. 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 6.7 சதவீதம் பேருக்கு மட்டும் ஆக்சிஜன் அளவில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது.

Must Read : ஊரடங்கு குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இந்தியாவில் டெல்டா உருமாறிய ஒரு வகை தான் அதிகமாக பரவி வருகிறது. எனவே இந்த ஆய்விலும் தடுப்பூசி போட்டவர்களிலும் போடாதவர்களிலும் டெல்டா உருமாறிய கொரோனா தான் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுப்பூசி போடாதவர்களில் 72.4 சதவீதம் பேருக்கும் ஒரு டோஸ் போட்டவர்களில் 68.1% மற்றும் இரண்டு டோஸ் போட்டவர்களில் 74.3% பேருக்கும் டெல்டா உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Delta Variants

அடுத்த செய்தி