• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேஷன் கடை ஊழியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்!

ரேஷன் கடை ஊழியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி கூறினார்.

  • Share this:
தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது,  அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



தொடர்ந்து ரேஷன் கடையில்  உள்ள  ஆவணங்களையும் பயோமெட்ரிக் மெஷினையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகும் அதன் அடிப்படையிலேயே தற்போதைய திடீர் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்

இதையும் படிங்க: தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறும் மாணவர்கள் அதிகரிப்பு


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில்  இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி,  மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: கோடிக்கணக்கில் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: