ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'ஓசி பேருந்து’ என விளையாட்டாக பேசியதை தவறாக புரிந்துக் கொண்டனர் - அமைச்சர் பொன்முடி விளக்கம்

'ஓசி பேருந்து’ என விளையாட்டாக பேசியதை தவறாக புரிந்துக் கொண்டனர் - அமைச்சர் பொன்முடி விளக்கம்

க.பொன்முடி

க.பொன்முடி

மக்கள் கீழே பேசியதைதான் தான் கலோக்கியலாக பேசியதாகவும் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர் எனவும் விளக்கம் அளித்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  அமைச்சர் பொன்முடி ‘ஓசி பேருந்து’ என குறிப்பிட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், கலோக்கியலாக பேசியதை தவறாக புரிந்துக்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  சமீபத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க’ என பேசினார்.

  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஓசி என குறிப்பிட்டு பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை அமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

  இதையும் வாசிக்க: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் கூடாது... சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்க - தொல்.திருமாவளவன்

  இந்நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மக்கள் கீழே பேசியதைதான் தான் கலோக்கியலாக பேசியதாகவும் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர் எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரியதுபடுத்த வேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: DMK party, Minister Ponmudi, Women