ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் பிடித்த உணவு எது? மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

தமிழ்நாட்டில் பிடித்த உணவு எது? மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்‌.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்‌.ரவி

வானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவி ஒருவர் உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த உணவு ஏது என்று கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்களத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர் இணையதள வசதியைப் பயனுள்ள வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். இதையடுத்து, சிவானந்த சரஸ்வதி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, பேசிய ஆளுநர், தற்போது 24-மணி நேரமும் இணையதள வசதி கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இணையதள சேவையை அனைத்து விதத்திலும் நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். எனவே, மாணவர்கள் நல்ல முறையில் இணையதளத்தைப் பயன்படுத்தினால் அதை விட, கல்விக்குச் சிறந்த கருவி வேறு ஏதும் இல்லை எனவும் கூறினார்.

Also read : குடியரசு தின விழா கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு

மேலும், தமிழ்நாட்டில் பிடித்த உணவு எது என்று மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு நெய் அதிகம் சேர்த்த பொங்கல் மற்றும் இனிப்பில் கேசரி பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: RN Ravi, School students, Tamil Nadu Governor