ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டாஸ்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டாஸ்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோவில் நிலம்

கோவில் நிலம்

கோவிவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளம்பரம் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி,  அவர்களை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது. தற்காலிக நீக்கம் செய்ததை எதிர்த்து ஸ்ரீதரன் என்ற அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், மற்ற 4 பேருக்கு எதிரான  தற்காலிக நீக்கத்திற்கு  ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து  செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். சட்டப்படி விசாரணையையும்  தொடர அனுமதி அளித்தார்.

மேலும் படிக்க: ராட்சத பைப்பை பார் ஆக மாற்றி மதுபிரியர்கள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்!

அதே சமயம், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆற்றில் குளித்த திமுக பிரமுகரை இழுத்து சென்ற முதலை.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

மேலும், கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை  அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chennai High court, Temple land