யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்காக வார இறுதி நாட்களில் மின்சார ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 5-ம் தேதி நடைபெற உள்ளது. யுஎப்எஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Also Read : விரைவில் அதீநவீன 'பிஎம் ஸ்ரீ பள்ளிகள்' தொடங்கப்படும் : கல்வி அமைச்சர்
அதன்படி சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வாராந்திர அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.