Home /News /tamil-nadu /

''சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது'' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

''சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது'' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது. ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மக்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  - எடப்பாடி பழனிசாமி

    சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது-

    சென்னை மாநகராட்சியில் உள்ள பல வார்டுகளில், பல பூத்களில் கள்ள ஓட்டுக்களை திமுகவினர் பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

    சென்னை மற்றும் கோவையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை தடுக்கவில்லை. காவல்துறையினர் முன்பாகவே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். அதிமுகவினரும், பொதுமக்களும் திமுகவினரின் அராஜகங்களை சுட்டிக் காட்டியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

    இதையும் படிங்க - அதிமுக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

    சென்னை திருவல்லிக்கேணி 114வது வார்டில் திமுகவினரால் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. இதை செல்போனில் படம் பிடித்து பொதுமக்கள் பதிவிட்டுள்ளனர். வீடியோவில், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. ஏன் கள்ள ஓட்டு போட விட மாட்டேன் என்கிறீர்கள் என்று திமுகவினர் பகிரங்கமாக கேட்கிறார்கள்.

    இதையெல்லாம் ஆதாரமாக நாங்கள் முன் வைக்கிறோம். திமுகவினர் அதிகாரிகளை மிரட்டி, டிரான்ஸ்பர் செய்து விடுவோம் என்கிறார்கள். இதேபோன்று திருவல்லிக்கேணியின் 115வது வார்டிலும் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க - வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM மெஷினை உடைத்த திமுகவினர் - மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு

    தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது. ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மக்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து திமுகவினர் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். மக்களை சந்திக்க திராணியற்ற திமுக கட்சி, மக்கள் செல்வாக்கையும் இழந்திருக்கிறது.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி