Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: இந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, மாநில தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கட்சிகளும் புகார் அளித்தன. 

    சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், இந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறி, மாநில தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கட்சிகளும் புகார் அளித்தன.

    இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Also Read: சட்டையை கழட்டு.. கள்ள ஓட்டுபோட வந்த நபரை அரை நிர்வாணப்படுத்திய ஜெயக்குமார்

    இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம் வெளியிட்டுள்ள ஆணைப்படி, நடந்து முடிந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்‌ - 5 வார்டுகளில்‌ 7 வாக்குச்சாவடிகளில்‌ மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

    அதன்படி, மறுவாக்குப்பதிவு நடைபெறும்‌ இடங்கள்‌

    1. சென்னை மாநகராட்சி வார்டு எண்‌ 51, வாக்குச்சாவடி எண்‌. 1174 AV- வண்ணாரப்பேட்டை

    வார்டு எண்‌ 179, வாக்குச்சாவடி எண்‌. 5059 AV - ஓடைக்குப்பம்‌, பெசன்ட்‌ நகர்‌

    2. மதுரை மாவட்டம்‌ - திருமங்கலம்‌ நகராட்சி -
    வார்டு எண்‌. 17, வாக்குச்சாவடி எண்‌. 17 W

    3. அரியலூர்‌ மாவட்டம்‌ - ஜெயங்கொண்டம்‌ நகராட்சி -
    வார்ரு எண்‌. 16 வாக்குச்சாவடி எண்‌. 16 M, 16 W

    4. திருவண்ணாமலை மாவட்டம்‌ - திருவண்ணாமலை நகராட்சி
    வார்டு எண்‌.25 வாக்குச்சாவடி எண்‌, 57 M, 57 W

    மேலே குறிப்பிட்டுள்ள 5 வார்டுகளில்‌, 7 வாக்குச்சாவடிகளில்‌ மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை நடைபெறும்‌.

    கடைசி ஒரு மணி நேரம்‌, அதாவது, மாலை 5.00 மணி முதல்‌ 6.00 மணி வரை கோவிட்‌-19 அறிகுறி உள்ளவர்கள்‌ மற்றும்‌ பாதிப்புக்கு உள்ளானவர்கள்‌ மட்டும்‌ வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்‌.

    மறு வாக்குப்பதிவு நடைபெறும்‌ இடங்களில்‌ வாக்களிக்கும்‌ வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில்‌ அழியா மை பதிவு செய்யப்படும்‌ என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி