Home /News /tamil-nadu /

திமுகவில் அன்பழகனின் மகன்... திருவொற்றியூர் தனியரசு உள்ளிட்டோருக்கு சீட்

திமுகவில் அன்பழகனின் மகன்... திருவொற்றியூர் தனியரசு உள்ளிட்டோருக்கு சீட்

தனியரசை நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தனியரசை நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

DMK : நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் சென்னை 188 வது வார்டில் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை, திமுக தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, 11ம் கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் நாகர்கோவில், திண்டுக்கல் மாநகராட்சிக்கான வேட்பாளர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், குளச்சல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட நகராட்சிகளின் வேட்பாளர் பட்டியல் விவரமும் வெளியாகியிருக்கிறது. இதேபோல், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பேரூராட்சி வேட்பாளர் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை 188 வது வார்டில் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை தியாகராயநகரில் மறைந்த அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு 141-வது வார்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது.  அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தற்போதைய தி.நகர் எம்.எல்.ஏ. வாக உள்ளார்.

    Read More : பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்... ரங்கசாமிக்கு ஆலோசனை கூறிய திமுக

    99வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவகாமி ஐஏஎஸ்க்கு போட்டியாக அதே வார்டில் பரிதி இளம்வழுதியின் மகள் பரிதி இளம் சுருதி போட்டியிடுகிறார்.

    Must Read : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்

    திருவொற்றியூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடு இடிவதற்கு முன்பு, அப்பகுதி மக்களை குடியிருப்பில் இருந்து வெளியேற்றி 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை காப்பாற்றிய திமுக பகுதி செயலாளர் தனியரசுக்கு போட்டியிட, 10வது வார்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, DMK, Local Body Election 2022

    அடுத்த செய்தி