Home /News /tamil-nadu /

உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை.. திருப்பூர், தேனி திமுக நிர்வாகிகள் நீக்கம்

உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை.. திருப்பூர், தேனி திமுக நிர்வாகிகள் நீக்கம்

துரை முருகன், மு.க.ஸ்டாலின்

துரை முருகன், மு.க.ஸ்டாலின்

DMK | உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை பார்த்த திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. 21 மாநகராட்சிகளில் கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 20 மாநகராட்சிகளில் திமுக போட்டியிட்டது. அதேபோல் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுக உறுப்பினர்கள் பலர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

    Also Read:  விண்ணை முட்டும் கட்டுமானப் பொருள்களின் விலை.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

    இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

    Also Read: தன்னம்பிக்கை எதிரொலிக்கும் நரிக்குறவ இன மாணவியின் பேச்சு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

    இதனையடுத்து மாவட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோடிகளில் செலவு செய்து வெற்றிபெற்றிருக்கோம் என பிடிவாதம் செய்ய ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தி வழிக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டதாக திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, Durai murugan, Local Body Election 2022, MK Stalin

    அடுத்த செய்தி