நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருசில பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஜனவரி 28) தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறவுள்ளது.
நேரடித் தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள்:
21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு... பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு
மறைமுக தேர்தல் :
21 மாநகராட்சிகளின் மன்ற மேயர் பதவியிடங்கள் மற்றும் துணை மேயர் பதவியிடங்கள், 138 நகராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் துணை தலைவர் பதவியிடங்கள், 490 பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 1,298 பதவியிடங்கள் நேரடித் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுகத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.