Home /News /tamil-nadu /

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக - பாஜக கூட்டணி இடப்பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக - பாஜக கூட்டணி இடப்பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி.

அதிமுக-பாஜக

அதிமுக-பாஜக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொகுதி இடப் பங்கீடு தொடர்பாக சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதியம் 12.40 மணிக்கு துவங்கிய கூட்டணி பேச்சு வார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்றது. 

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்வு, கூட்டணி இடப்பங்கீடு உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று அதிமுக- பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
    முன்னாள் மாநில தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மதியம் 12.40 மணிக்கு துவங்கிய கூட்டணி பேச்சு வார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்றது. மாநகராட்சிகளில் அதிக இடங்களை வழங்க முடியாது  என்றும்  நகராட்சி பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தர தயார் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டோடு பாஜக அந்த இடங்களை பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ’எங்களது கட்சியினருக்கு வழங்கும் இடங்களை உங்களக்கு அளிக்கிறோம் எனில் அதில் வெற்றி பெற வேண்டும். நாங்களும் போட்டியிடுகிறோம் என இருப்பதால் ஒரு பயனும் இல்லை. வேறு ஒருத்தரின் வாய்ப்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்’ என அதிமுக தரப்பில் பாஜகவிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்-திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும்,எங்களுக்கு எந்தெந்த இடங்கள் வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம், அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள் என கூறினார்.

    மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறிய அவர், அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டு வருவதோடு, திமுகவின் தவறுகளையும்
    மக்களின் பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக அதிமுக மக்கள் மன்றத்தில் பேசி வருவதாகவும்,நகர்புறங்களில் பாஜக வலுவாக உள்ளது என்றும்,பேச்சு வார்த்தை சுமுகமாகவே நடைபெற்றதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: இது நாகாலாந்து அல்ல தமிழகம்... ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு திமுகவின் முரசொலி விமர்சனம்


    தமிழக ஆளுநர் குறித்து முரசொலி கட்டுரைக்கு பதில் அளித்த அவர்,தமிழக அரசை பாராட்டி பலமுறை ஆளுநர் பேசியுள்ளார் அப்போதெல்லாம் விமர்சிக்காத நபர்கள் தற்போது பேசியுள்ளதை கண்டிப்பதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும்,எந்தெந்த இடங்களை வழங்குவது குறித்து தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும், Offer என்பது அவர்களின் கடமை; accept என்பது எங்களின் கடமை எனவும் கூறினார்.

    ஆளுநர் குறித்த முரசொலி கட்டுரைக்கு, திமுகவுக்கு இரட்டை நாக்கு என்றும் அவர்களுக்கு ஏற்றது போல் ஆளுநர் ஒத்துவராவிட்டால் பச்சோந்தி போல் விமர்சனம் செய்வார்கள், முரசொலியை திமுக காரர்களே படிக்கமாட்டார்கள் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, BJP, Local Body Election 2022

    அடுத்த செய்தி