Home /News /tamil-nadu /

வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் வேட்பாளர்களை அச்சுறுத்திய 'ராகு காலம்'

வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் வேட்பாளர்களை அச்சுறுத்திய 'ராகு காலம்'

வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் வேட்பாளர்களை அச்சுறுத்திய 'ராகு காலம்'

வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் வேட்பாளர்களை அச்சுறுத்திய 'ராகு காலம்'

Local Body Election | Trichy | திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இறுதிநாளிலும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

திருச்சி மாநகராட்சியில், 254, நகராட்சிகளில், 329, பேரூராட்சிகளில், 443 என மொத்தம், 1,026 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வரை பெறப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை, 1,258.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் என்பதால், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம், கோ. அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய, நான்கு கோட்ட அலுவலகங்களிலும் காலை, 10 மணி முதலே விறுவிறுப்பான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.

ராகுகாலம்

ஆனால், வேட்பாளர்களின் ஆர்வத்திற்கு தடை போடுவதை போல, காலை, 10.30 மணி முதல், 12 மணி வரையிலான 'ராகு காலம்' அமைந்திருந்தது.

Also Read : சுயேச்சை வேட்பாளராக சென்னையில் களமிறங்கிய கானா பாலா

இதனால், காலை, 10 மணிக்கே, பொன்மலை கோட்ட அலுவலகம் வந்து விட்ட வேட்பாளர்கள், 12 மணி வரை காத்திருந்து, அதன்பிறகு நல்ல நேரம் துவங்கிய பிறகு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

உண்மையில் இது அவர்களுக்கு 'நல்ல நேரமா?' என்பதை தேர்தலின் போது தங்களது ஓட்டுகள் மூலம் பொதுமக்கள் தான் சொல்ல வேண்டும்.

Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, DMK, Local Body Election 2022

அடுத்த செய்தி