முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பாஜக மும்முரம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பாஜக மும்முரம்!

அண்ணாமலை

அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பிற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான  ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றிருந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.இதில் போட்டியிட பாஜக மும்முரமாக தயாராகி வருகிறது. நகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன்,  நயினார் நாகேந்திரன், ஜி.கே.எஸ். செல்வகுமார், ராம ஸ்ரீனிவாசன்,  கரு.நாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: ''மேட்டூர் அணையிலிருந்து வீணாகும் நீரை ஏரிகளில் உடனடியாக நிரப்ப வேண்டும்!'' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இதேபோல், தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ. சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மண்டல பொறுப்பாளராக காரத்தே தியாகராஜன், மதுரை கோட்ட பொறுப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன்,  திருச்சி மண்டல பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் முருகானந்தம்,  வேலுார் மண்டல பொறுப்பாளராக மாநில துணை தலைவர் நரேந்திரன்; கோவை மண்டல பொறுப்பாளராக மாவட்ட பிரபாரி ஏ.பி.முருகானந்தம்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிங்க: கொள்முதல் நிலையத்திலேயே முளைக்கத் தொடங்கிய நெல் மூட்டைகள்!

First published:

Tags: BJP, Local Body Election 2021