முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்தியில் அறிவிப்பு-யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் அவதி!

இந்தியில் அறிவிப்பு-யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் அவதி!

இந்தியில் அறிவிப்பு

இந்தியில் அறிவிப்பு

தமிழகத்தில் 31 ஆயிரம் பேர் குடிமை பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். சென்னை, கோவை, மதுரை, வேலூரில்  77 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கொரோனா நெறிகளை பின்பற்றி இன்று காலை தேர்வு தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் இன்று குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் தேர்வு நடைபெறும்  சில மையங்களின் வெளியே ஒட்டியுள்ள அறிவிப்பு இந்தியில் இருந்ததால் இந்தி தெரியாதவர்கள் , அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாமல் அவதி அடைந்தனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,  ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 24 குடிமை பணிகளுக்கு (Civil service) மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை, முதண்மை, நேர்காணல் என்று மூன்று விதமான தேர்வுகள் மூலம் மாணவர்கள் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி நடப்பாண்டு 712 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.  முதல்நிலை தேர்வு  ஜூன் 27ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 31 ஆயிரம் பேர் குடிமை பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். இதற்காக சென்னை, கோவை, மதுரை, வேலூரில்  77 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கொரோனா நெறிகளை பின்பற்றி இன்று காலை தேர்வு தொடங்கியது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு மின்வெட்டு காலத்தை தமிழகம் தாங்காது: கமல்!

இந்நிலையில்,  யுபிஎஸ்சி (UPSC) தேர்வு நடைபெறும் அயனாவரம் தேர்வு மையம் உட்பட சில மையங்களின் வெளியே ஒட்டியுள்ள அறிவிப்பு முழுவதும் இந்தியில் உள்ளது. தமிழில் இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் இருந்தால் கூட தேர்வர்களால் அதனை புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்தியில் மட்டுமே உள்ளதால் இந்திய தெரியாத தேர்வர்கள் அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் அவதி அடைந்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்: 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது!

First published:

Tags: Competitive Exams, UPSC