சிங்கார சென்னை 2.O திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள்

சென்னை கிண்டி மேம்பாலம்

சென்னை மாநகரம் குப்பைகள் இல்லாத நகரமாகவும், சுவரொட்டிகள் இல்லாத சென்னையாகவும் மாற்றப்படும்.

 • Share this:
  சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்து அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை பசுமை நிலமாக மீட்டெடுத்தல்.

  நுண்ணிய உர மையங்களை வலுப்படுத்துதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்துல்.

  கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை சேகரித்து விஞ்ஞான முறையில் மறு சுழற்சி செய்தல். சென்னை மாநகரை குப்பை இல்லாத மாநகராக மாற்றுதல்.

  சென்னை மாநகரம் குப்பைகள் இல்லாத நகரமாகவும், சுவரொட்டிகள் இல்லாத சென்னையாக மாற்றுதல்.

  சென்னை நகரம் முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புடம் மரம் நடும் பணிகள், நீர் நிலைகள் மற்றும் நீர் வழிதடங்களை புணரமைத்தல்.

  ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது மண்டபம், அடையாறு சைதை திருவிக பாலங்கள் வண்ண விளக்குகளால் அலகரிக்கப்படும்.

  மாற்று திறனாளிகளுக்கு உகந்த நடை பாதை அமைத்தல். மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவித்தல்.

  நகரம் முழுவதும் தரமான பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் அமைத்தல். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்தல்.

  Read More : பொன்விழா நாயகன் : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய துரைமுருகன்

  நவீன நூலகங்கள் அமைத்தல், நகர்த்தின் பல்வேறு பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

  சென்னை தினம், சென்னை சங்கமம் போன்ற கலாசார நிகழ்வுகளை ஊக்குவித்தல்” போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சென்னையில் உள்ள பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளை தூர்வாரி அதில் மழைகாலத்தில் நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி துறைக்கு கடந்த காலங்களை விட குறைவான நிதியை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி பேசினார். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் நிதி இழப்பு என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும், அது நிதி இழப்பீடு அல்ல எனவும் உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தினாலும் நிதி கிடைத்துவிடும் எனவும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

  மேலும், சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களையும் எஸ்.பி.வேலுமணி விளக்கி பேசினார்.

  Must Read : கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  அதற்கு பதிலளித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்க சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாசனத்திற்கு பயன்படாத 500க்கும் மேற்பட்ட ஏரிகளை ஆழப்படுத்தி அகலப்படுத்தி மழைகாலங்களில் நீரை சேமித்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த உள்ளதாக பதிலளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்த 25 ஆண்டுகளுக்கு சென்னை மாநகர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
  Published by:Suresh V
  First published: