முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எவ்வளவு முயன்றாலும் உங்களால் கூட்டணியை உடைக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

எவ்வளவு முயன்றாலும் உங்களால் கூட்டணியை உடைக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் சனாதன ஆதரவாளர்கள் மார்க்ஸை பிளவுவாதிகள் என்கின்றனர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

எவ்வளவு முயன்றாலும் உங்களால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைக்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.மாணிக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், அப்போது நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கூறிய அவர், ஒற்றுமை கைகள் சேராமல் வெற்றி கனியை பறிக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் மதவாத வகுப்புவாத, எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் எனவும், மார்க்சிய கொள்கை வகுப்புகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் மார்க்ஸ் கொள்கை பிளவுபடுத்தும் கொள்கை என பேசுவோருக்கு பதிலளிக்கும் கடமை நமக்கு உண்டு எனவும் கூறினார்.

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் சனாதன ஆதரவாளர்கள் மார்க்ஸை பிளவுவாதிகள் என்கின்றனர் என கூறிய அவர், எவ்வளவு முயன்றாலும் உங்களால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைக்க முடியாது என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Congress, UPA