காதல் திருமணம்: கத்திமுனையில் சகோதரியை கடத்திய அண்ணன்!

news18
Updated: July 12, 2018, 12:18 PM IST
காதல் திருமணம்: கத்திமுனையில் சகோதரியை கடத்திய அண்ணன்!
காதல் திருமணம் செய்த மித்லேஷ் குமார் - நளினி சிங்
news18
Updated: July 12, 2018, 12:18 PM IST
காதல் திருமணம் செய்துகொண்டதால் தனது சகோதரியை கத்திமுனையில் கடத்த முயன்ற அண்ணனின் சாதிவெறி செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மித்லேஷ் குமார் மற்றும் நளினி சிங் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் சாதி மாறி திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் எங்கு தேடியும் இவர்கள் தென்படவில்லை. பின்னர் மித்லேஷ் குமாரின் வீட்டில் பெண் வீட்டார் பிரச்னை செய்தபோது மித்லேஷ் குமார் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கட்டடத்தில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து நளினியின் அண்ணன் மித்லேஷ் குமாரின் தொலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். அதன்பின்னர் அவரை போனில் அழைத்து நாங்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக நயமாக பேசி அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு சென்றுள்ளார். அதன் பின் அவர்களுடன் நளினியின் அண்ணன் ரன்வீர் விஜய் சிங் 10 நாள் தங்கியுள்ளார்.

அப்போது திடீரென்று நளினியின் அண்ணன், மித்லேஷ் குமார் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து நளினி சிங்கை சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்கு கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். பின் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் ஏற்றி லக்னோ செல்வதற்காக சென்னை விமான நிலையம் அழைத்து வந்துள்ளார்.

விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் இதுபற்றிய தகவலை நளினி தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய போலீசார் அவரது அண்ணனை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...