முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விருப்பமில்லாமல் நடந்த திருமணம் பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடிவிடாது - சென்னை ஹைகோர்ட்

விருப்பமில்லாமல் நடந்த திருமணம் பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடிவிடாது - சென்னை ஹைகோர்ட்

மாதிரி படம்

மாதிரி படம்

திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது - நீதிபதி

  • Last Updated :
  • Tamil Nadu, India

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது என மறுத்து விட்டது.

கோவையில் உள்ள தேவாலயத்தில், கடந்த அக்டோபர் மாதம், தனது விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக் கோரி மணப்பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், திருமணம் என்பது நடந்து, அதை பதிவு செய்யாவிட்டாலும், அது செல்லத்தக்கது தான் எனவும், அந்த திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Also Read : என் தாயை பற்றி பேச சசிகலாவிற்கு அருகதை இல்லை.. சட்டப்படி நடவடிக்கை பாயும்.. ஜெ. தீபா எச்சரிக்கை!

மேலும், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த நீதிபதி, திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Chennai High court, Madras High court