ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இருப்பது வெட்கக்கேடானது – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இருப்பது வெட்கக்கேடானது – ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Governor RN Ravi | தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இவை இன்னும் நடக்கின்றன. – ஆளுநர்ஆர்.என்.ரவி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னேறிய மாநிலம் என கூறும் தமிழகத்தில் இன்னமும் தீண்டாமை கொடுமை உள்ளது, வெட்கக்கேடானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஹரிஜன் சேவா சங்கத்தின் 90வது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதை தெரிவித்தார்.

  75 ஆம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் 90 ஆம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சேத்துப்பட்டில் உள்ள SRS சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர்,  அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார்.  மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம்,  நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தார்கள். மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக்கினார்.

  தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இங்கு உள்ளனர். தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இவை இன்னும் நடக்கின்றன. ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், ஹரிஜன பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் 86% தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர். தண்டிக்கப்படுவதில்லை என்பதே இக்குற்றங்கள் தொடர காரணம்.

  தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும்.. மாநில உரிமையில் தலையிட்டால் எதிர்ப்போம் - ஜெயக்குமார்

  இன்னும் பல இடங்களில்,  பல பள்ளிகளில் , கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்?  ஹரிஜன மக்கள் நம் மக்கள். அவர்களின் நிலை மேம்பட உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமை. முன்னேறிய மாநிலம் என கூறும் தமிழகத்தில் இன்னமும் தீண்டாமை கொடுமை நிலவுவது என்பது மிகவும் வெட்கக்கேடானது. இதுகுறித்து நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிகார அரசியல் போட்டியில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை நாம் மறந்துவிட்டோம் என்றார்.

  Published by:Musthak
  First published:

  Tags: RN Ravi