Home /News /tamil-nadu /

தற்போது வரை நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்.. ஓ.பன்னீர்செல்வம்

தற்போது வரை நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்.. ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

    கட்சியின் சட்டவிதிப்படி தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் ஓபிஎஸ் இருந்துவிட்டார். மேடையில் ஈபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    பின்னர், தாமதமாக அரங்குக்குள் வந்த ஓ.பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தபின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கட்சி சட்டவிதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறோம்.

    முர்முவை அதிமுக சார்பில் சந்தித்து இதய பூர்வ ஆதரவை தெரிவித்தேன். அதிமுகவில் தற்போது வரை நான்தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, OPS - EPS

    அடுத்த செய்தி