• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆகஸ்ட் 30 முதல் மதுரையில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

ஆகஸ்ட் 30 முதல் மதுரையில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை ஜங்சன்

மதுரை ஜங்சன்

பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.

  • Share this:
    மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    கொரோனா ஊரடங்கால் மதுரை கோட்ட ரயில்வேயில், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 200 கி.மீ. தூரத்துக்கு மேல் உள்ள நாகர்கோவில் - கோவை, மதுரை- விழுப்புரம், மதுரை-புனலூர் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, வடக்கு மண்டல ரயில்வேயில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் வருகிற 30ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 30ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06504) மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (வ.எண்.06503) செங் கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயிலில் 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    Must Read : கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 4,200 பேர் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால் பயணிகள் ரயில் கட்டணத்திற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: