• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தல்: வரலாறு காணாத வன்முறை..தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி திமுக வெற்றி- அதிமுக விமர்சனம்

உள்ளாட்சித் தேர்தல்: வரலாறு காணாத வன்முறை..தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி திமுக வெற்றி- அதிமுக விமர்சனம்

அதிமுக

அதிமுக

வேட்பு மனு தாக்கல் தொடங்கி  வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது என்று அதிமுக தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்றுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக கொண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.


    தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சொற்ப இடங்களிலெயே வென்றுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது.




    வேட்பு மனு தாக்கல் தொடங்கி  வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது. முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான  பாஸ்கர பாண்டியன்  திமுக வேட்பாளர்களின் பட்டியலை பெற்று தான் சொல்பவர்கள் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு வழங்கியுள்ளார்.

    மேலும் படிக்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம் - மு.க.ஸ்டாலின்!


    சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடி வாங்கி திரும்ப செலுத்த மறுப்பு- ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்


    தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக கொண்டு இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.  இந்த  சட்ட விதிமீறல்களையும்  தேர்தல் ஆணையத்தின் கையாலாகதனத்தையும்  நீதிமன்றத்தில் எடுத்துரைத்து இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல்  வழியாக பெற்ற வெற்றி என்பதை  சட்டத்தின் முன்,  ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்துவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: