கஜா புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
கஜா புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வேதனையில் விவசாயிகள்
Cyclone gaja: புதுப்பள்ளி, விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில், விவசாயக் கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கியவர்களின் வங்கிக்கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன. இதனால் அரசு வழங்கிய 10,000 ரூபாய் நிவாரண தொகையை எடுக்கமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
கஜா புயல் தாக்கி ஒரு மாதம் ஆன நிலையிலும், நாகையில், புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. இந்தநிலையில் புதுப்பள்ளி, விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில், விவசாயக் கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கியவர்களின் வங்கிக்கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன.
இதனால் அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை எடுக்கமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
பேரிடர் கால சூழ்நிலை நெருக்கடியை பயன்படுத்தி கடன்களை திருப்பி செலுத்த வேண்டுமென வங்கிகள் கெடுபிடி காட்டுவதாக தெரிவிக்கும் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இதனால் சேதமடைந்த வீடுகளை கூட சரிசெய்யமுடியாமல் நடுத்தெருவில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கேட்டால் வங்கி அலுவலர்கள் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம்சாட்டினர். இப்பிரச்னைக்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.