மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் திமுக சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எம்.பி., அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
இன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதியாக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக கூறி இருந்தனர். இன்னும் 72 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில், தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டம் பாஜக மூலம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் எழுப்பிய கேள்விக்கு, சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை. பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.
தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ALSO READ | அரசு பேருந்திற்குள் மழை... குடை பிடித்தபடி பயணம் செய்யும் பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ
பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை.
இவற்றையெல்லாம் முழுமையாக குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற வாதம் என்று கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பேருந்து கட்டணம் உயராது என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும், சென்னையில் முதல் கட்டமாக மின்சார பேருந்துகள் 500 தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் - தி.கார்த்திகேயன்,
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.