BREAKING | புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

BREAKING | புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

முதல்வர் பழனிசாமி

அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

  • Share this:
    தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு மிகாமல், பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள், 19.12.2020 முதல் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. இந்தக்கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சி காவல் துணை ஆணையரிடமும் உரிய அனுமதி பெறுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் நலம் கருதி, அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Gunavathy
    First published: