தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தற்போதைய விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் அமைத்து உத்தரவிடுவார். இந்த குழுவில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், ஆளுநர் மற்றும் தமிழக அரசின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி இடம்பெறுவர்.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு தேடுதல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டதும், காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு ஆளுநரின் உத்தரவுப்படி நாளிதழ்களில் வெளியிடப்படும்.
விண்ணப்பம் செய்ய உரிய அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ள நபர்களிடம் தேடுதல் குழுவால் நேர்காணல் நடத்தப்பட்டு அவர்களுள் 3 நபர்களின் பெயர்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சட்டப்பேரவையில் மசோதா.. ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு
மூன்று நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபரை ஆளுநர், துணைவேந்தராக நியமனம் செய்வார். அதற்கான ஆணையில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டு துணைவேந்தராக நியமிக்கப்படும் நபரிடம் ஆளுநர் உத்தரவை வழங்குவார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.