Home /News /tamil-nadu /

துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யமுடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்கவும் ...
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மாநில அரசை மதிக்காமல் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் உயர்கல்வியின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  உயர் கல்வி அளிப்பதில் இந்த பல்கலைக்கழங்கள் வரலாற்று சிறப்புமிக்க செயலை ஆற்றி வருகின்றன.

இவற்றின் வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படக்கூடிய வேளையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல் இருப்பது  உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தர்களை ஆளுநர் நியமிப்பது மரபாக உள்ளது.

ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தனக்குமட்டுமே உரிமை என செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலை தூக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்யமுடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மக்கள் ஆட்சியின் தத்துவத்துக்கு விரோதமாக உள்ளது.

இதையும் படிங்க: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்... சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவு தாக்கல்


கர்நாடகா, தெலுங்கானாவில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்க கூடிய வழிவகை உள்ளது என்றும் குஜராத் மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணை வேந்தரை நியமிக்கும்  சட்ட முன்வடிவு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2007ஆம் ஆண்டு அதிமுக இதற்கு இசைவு தெரிவித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பாராட்டு... கட்சி பாராமல் தொகுதிக்கு திட்டங்களை வழங்குவதாக பேச்சு


எனவே இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்க அதிமுகவுக்கு எந்த தயக்கமும் இருக்காது என்றார். முன்னதாக சட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது; பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Murugesh M
First published:

Tags: MK Stalin, Tamil Nadu Governor, TN Assembly, University vise chancellor

அடுத்த செய்தி