மாயமான சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசுக்கு ஐ.நா மனிதஉரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனிதஉரிமை ஆர்வலரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா மனிதஉரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அதில், மனிதஉரிமை விதிமீறல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று மனிதஉரிமை கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரங்களை அளிக்குமாறு மனிதஉரிமை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.
முகிலன் சமாதியாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும், அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தப்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also see... புதுச்சேரி ஜிப்மரில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.