பாரதியாரை காந்தி அங்கீகரித்தபோதும் தமிழகத்தில் கிடைக்காமல் இருந்தது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை

நிர்மலா சீதாராமன்

பாரதியாரை காந்தி அங்கீகரித்தபோதும் தமிழ்நாட்டில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், பாரதியார் குறித்து நியூஸ்18 குழுமத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘பாரதியின் பாடல் வரிகள், முன் எப்போதையும் விட இப்போது பொருந்திப்போகிறது. அவர், வெறும் பெண் விடுதலையைப் பற்றி மட்டும் பேசவில்லை. அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் அறிவியல் குறித்துப் பேசியுள்ளார்.

    சிந்து நதியிலிருந்து மின்சாரம் இங்கு வரும் என்பது குறித்து பேசினார். ஒவ்வொரு மாவட்டத்தின் பொருள்களைத் தேடிப் பிடித்து ஏற்றுமதி செய்யவேண்டுன் என்று பிரதமர் மோடி பேசுகிறார். சுதேசி பொருள்களை அடையாளப்படுத்துவது குறித்தும் அதில் பெண்கள் பங்களிப்பு குறித்தும் பாரதியார் பாடியுள்ளார். சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அவரது குரல் ஒலித்தது. இந்தியாவைத் தற்போது பாதிக்கும் பிரச்னைகளுக்கு தேவையான முற்போக்கு சிந்தனைகளை, கனவுகளை அவர் அப்போதே கொண்டிருந்தார்.

    அவரது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வலிமையானவை. பாரதி பாடல்கள் வரிகள், மின்சாரம் தாக்குவதைப் போன்றதும், இரவில் தோன்றும் மின்னல் கீற்றைப் போல வீரியமிக்கவை. பாரதியின் காலத்தில் கணவருக்கு இணையாக சாலையில் மனைவி நடந்துசெல்வதே தவறாக பார்க்கப்பட்டது. ஆனால், பாரதியோ, மனைவியை சரிசமாமாக தன்னுடன் அழைத்துச் செல்வார். அவரது தோளில் கைபோட்டபடி அனைவரும் அதைப் பார்த்து கேலி செய்தாலும் அதுகுறித்து கவலைக் கொள்ளமாட்டார்.

    இந்திய மகளிர் மேம்பட்டவர்களே என்றும் அவர்களை சக்தி என்றும் அழைத்தவர். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என இந்தியப் பெண்களைப் பெருமைப்படுத்தியவர். பல தசாப்தங்களுக்கு பாரதிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரையிலும், அதற்குப் பிறகும் பாரதியாருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழகத்தை ஆண்டவர்கள், திராவிடக் கட்சிகள், பாரதியாரை தற்போது உரிமை கொண்டாடுகின்றனர்.

    1945-ல் கல்கி கிருஷ்ணமூர்த்திதான் எட்டையபுரத்தில் மணி மண்டபம் கட்டும்பணிகளை மேற்கொண்டார். அப்போது ராஜாஜிதான் அதைத் தொடங்கிவைத்தார். 1947-ல் பாரதியாரின் மார்பளவு சிலையுடன் மண்டபம் தயாரானபோது ராஜாஜிதான் திறந்துவைத்தார். பாரதியின் பார்வை தீப்பிழம்பைப் போன்றவை. அவரை அறிந்தவர்கள் அதை அறிவார்கள். புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக தமிழ்நாடு வரும்போது அவர் கைது செய்யப்பட்டார். அப்போது, சென்னைக்கு வந்த பாரதியை பார்க்க ராஜாஜி சென்றபோது, பாரதியின் கண்களில் கீற்று மறைந்திருந்ததைப் பார்த்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜாஜி, ம.பொ.சி போன்ற சிலர் மட்டுமே பாரதியை அங்கீகரித்து பாராட்டிவந்தனர். பாரதியை வெகுகாலம் புறந்தள்ளிய சில தலைவர்கள் அவரை அங்கீகரிக்க பல காலம் பிடித்தது. காங்தி தொடங்கி, உலகத்தின் பல்வேறு மூலைகளில் பாரதி அங்கீகரிக்கப்பட்ட போதிலும் இங்கு உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் பிராமினாக பிறந்ததன் காரணமாக கூட இருந்திருக்கலாம். நூற்றாண்டுக்குத்தான் ஒரு பாரதி உதிப்பார். மக்களை அதை உணரவேண்டும்.
    Published by:Karthick S
    First published: