சட்டமன்றத் தேர்தல் வெற்றி- 4 மாவட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

நான்கு மாவட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு நாளை மறுநாள் இனோவா காரினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரிசாக  வழங்க உள்ளார்.

  • Share this:
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றி பெறவைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்குவேன் என்று அப்போதைய பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

அதன் படி பா.ஜ.க வேட்பாளர்கள் எம் ஆர். காந்தி நாகர்கோயில் தொகுதியிலும், வானதி சீனிவாசன் - கோவை தெற்கு தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி தொகுதியிலும், சரஸ்வதி - மொடக்குறிச்சி தொகுதியிலும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றனர். இதனால் இவர்கள் வெற்றி பெற்ற மாவட்டங்களான ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு நாளை மறுநாள் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதிய இனோவா காரை பரிசாக வழங்குகிறார்.

தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் மாவட்ட தலைவர்களுக்கு பாஜக சார்பில் இனோவா கார் வழங்கப்படும் என்று முருகன் தெரிவித்திருந்தார். இது அப்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பலராலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? எத்தனை மாவட்டங்களுக்கு இனோவா கார் வழங்கப்படும் என கேட்டபோது வெற்றி பெறும் அனைத்து மாவட்டங்களுக்கும் இனோவா கார் உறுதியாக வழங்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 20 தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளை பெற்று 20 ஆண்டுகள் கழித்து சட்டமன்றம் சென்றனர். இதனை கொண்டாடும் விதமாக மாவட்ட செயலாளர்களுக்கு இனோவா காரை பரிசாக வழங்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாளை மறுநாள் 4பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா காரினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரிசாக  வழங்க உள்ளார்.
Published by:Karthick S
First published: