முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும்.. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து..!

மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும்.. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து..!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

ஒன்றாக உள்ள நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியாக சிலர்  தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டிருப்பதாக நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமைச்சர் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவலை பரப்புவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக உள்ள நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியாக சிலர்  தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டிருப்பதாக நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமைச்சர் கூறினார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வதைப் போல, தமிழர்கள் பலரும் வேறு மாநிலங்களில் பணியாற்றி வருவதாக கூறிய அவர், பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

First published:

Tags: L Murugan, Migrant Workers, Tamilnadu