தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இலங்கைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் (இலங்கை அகதி) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று ஜனவரி மாதம் 18-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள், நான்கு பேரும் கடலில் மூழ்கி உயிரழந்ததாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கி விசைப்படகோடு நீரில் மூழ்கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்தவிவகாரம் தொடர்பாக இன்றைய மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா, அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.

    அவர் பேசும்போது, ‘தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: