சுனாமி போன்ற பேரிடரை மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும் சாகர் அன்வேஷிகா
இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 'சாகர் அன்வேஷிகா' என்ற ஆராய்ச்சிக் கப்பலை மத்திய சுகாதாரம் மற்றும் புவிசார் அறிவியல்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாட்டுக்காக அர்ப்பணித்து வைத்தார். சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம் சார்பில் கடலோர ஆராய்ச்சிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட சாகர் அன்வேன்ஷிக்கா கப்பலானது தற்போது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
மேம்பட்ட நவீன அறிவியல் உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப செயல் திட்டங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சாகர் அன்வேஷிக்கா கப்பல் 43 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும் கொண்டது. உயர்தர கடல் சார்ந்த தகவல் மற்றும் தரவுகளை சேகரித்தல், கடல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துதல் , புவிசார் அறிவியல் அமைச்சக கப்பல்களுடன் சேர்ந்து கடல் குறித்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுதல் மற்றும் கடல்சார் உயிரினங்கள் குறித்த ஆய்வினை மேற்கொளளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள. இந்த பிரத்யேக ஆய்வு கப்பல் ஆனது 8 விஞ்ஞானிகள் 12 ஊழியர்கள் என மொத்தம் 20 பேர் பயணிக்கக் கூடியதாகும்.
சாகர் அன்வேஷிகாவின் சிறப்பு தொழில்நுட்ப திறன்கள்:
1.அறிவியல் ஆய்வுகளுக்கு விசாலமான பணித்தளம்.
2. நவீன உபகரணங்களை உள்ளடக்கிய ஆராய்ச்சிக்கூடம்.
3. மாதிரிகளை பாதுகாக்கும் வசதிகள்.
4. கப்பல் செப்பனிடும் இடத்திற்கு செல்லாமலே சோனார் கருவி பொருத்தும் திறன்.
5. அதிநவீன நீர்வழிப் போக்கு மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்திய மாலுமி அறை
6. இயந்திர கட்டுப்பாட்டு அறை மற்றும் வின்ச் கட்டுப்பாட்டு நிலையம்
7. சிறந்த சுழற்சி திறன் கொண்ட திசைதிருப்பி கட்டை
8. நவீன தங்கும் அறைகள்
இந்தநிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர ஹர்ஷ்வர்தன், ‘ஏற்கனவே கடலோர ஆய்வு பணிகளுக்காக சில கப்பல்கள் இருக்கும் நிலையில் புதிதாக சாகர் அன்வேஷிகா என்ற கப்பல் இணைந்திருப்பது மேலும் பலத்தை கொடுக்கிறது. இதன் மூலமாக நம்முடைய கடல்சார் ஆராய்ச்சி மேலும் வலிமை பெறும். புதிய ஆராய்ச்சிக் கப்பலான இதன் மூலமாக கடல் நீரின் தரம் பல்வேறு கனிம வளங்கள் குறித்து இன்னும் நுட்பமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.
இரண்டாவது புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ள இந்த தருணம் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணமாக அமைந்துள்ளது. நம்முடைய மிகப்பெரிய நோக்கம் இன்று வெற்றியடைந்துள்ளது. இதன் மூலமாக நம் கடல் சார் ஆராய்ச்சி மேலும் விரிவடையும். நம் கடல் வளங்களை பாதுகாக்க தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அதனை விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்போம். அதன்மூலம் அவர்கள் கடல் வளத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மீன் வளத்தையும் கடல் வளத்தையும் பெருகுவார்கள் என தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்