ஐஐடி மெட்ராஸின் பெயர் மாற்றப்படுகிறதா? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸின் பெயர் மாற்றும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  ஐஐடி எனும் பெயரில் இந்திய தொழில்நுட்பக் கழகம் என்ற கல்வி நிறுவனம் நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி என்பது இந்தியாவிலுள்ள மிக உயர்வான கல்வி நிறுவனங்களில் முதன்மையானது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிந்தனையில் உருவானது ஐ.ஐ.டி.

  இந்தியாவில் தற்போது 23 ஐஐடிக்கள் உள்ளன. அதில், சென்னையிலும் ஐ.ஐ.டி மெட்ராஸ் என்ற பெயரில் உள்ளது. மெட்ராஸ் என்ற பெயர் 1996-ம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது. இருப்பினும், மெட்ராஸ் என்ற பெயருடன் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளின் பெயர் இன்னும் மெட்ராஸ் என்ற பெயரையே தாங்கியுள்ளன.

  சென்னை பல்கலைக்கழகம் என்று தமிழல் அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras University என்றே அழைக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டாலும் ஆங்கிலத்தில் Madras high court என்றே அழைக்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல, ஐஐடி மெட்ராஸ் என்பதே அதிகார்பூர்வ பெயராக இருந்து வருகிறது. இந்தநிலையில், ஐ.ஐ.டி மெட்ராஸ் எனும் பெயரை ஐ.ஐ.டி சென்னை என்று மாற்றும் திட்டம் உள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், ‘இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்-க்கு (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) பெயர் மாற்றம் செய்யும் எந்த பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை. ஐ.ஐ.டி பம்பாய் என்பதும் இன்று ஐ.ஐ.டி பம்பாய் என்றே அழைக்கப்படுகிறது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

  இதைப்போல இந்திய உயர்கல்வி ஆணையம் உருவாக்குவது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கும் பணிகளில் மத்திய கல்வி அமைச்சகம் ஈடுபட்டு இருப்பதாக மற்றொரு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, ‘மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 29-ந்தேதி புதிய கல்விக்கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. ஒழுங்குமுறை, அங்கீகாரம், நிதி மற்றும் கல்வி தரநிலை அமைப்பு ஆகிய 4 தனித்துவமான செயல்பாடுகளை இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர புதிய கல்விக்கொள்கை பரிந்துரைத்து இருந்தது. அதன்படி இந்த ஆணையத்துக்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: