தமிழக
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற சம்பவங்களையடுத்து நுண்ணறிவு பிரிவினர் தயாரித்திருக்கக்கூடிய அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நுண்ணறிவு பிரிவினர் தயார் செய்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
Must Read : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
அதன் அடிப்படையில், அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதனையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள், அண்ணாமலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முன்னதாக, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக 2021ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.