• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினியை சந்திக்கிறாரா அமித்ஷா?

ரஜினியை சந்திக்கிறாரா அமித்ஷா?

அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார். வெற்றி வேல் யாத்திரை நடக்கும் இந்த சூழ்நிலையில் அமித்ஷா வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக தேசிய முன்னாள் தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிக்காக தமிழகம் வரும் அவர் 21ஆம் தேதி மாலை பாஜக மாநில நிர்வாகிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தொடர்ந்து பாஜக சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

மேலும் பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வை தமிழகத்தில் இருந்து துவங்க உள்ளார் என பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் தற்பொழுதுள்ள பாஜகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்தும் மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கூட்டணி முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...



அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ரகசியமாக மேலும் ஒருவரை அமித் ஷா சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக அது ரஜினிதான் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: