• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசின் ட்விட்டர் கணக்கில் பெரியாரை பாராட்டி பதிவிட்ட ட்வீட் அரைமணி நேரத்தில் நீக்கம் - சர்ச்சையில் சிக்கிய எல்.முருகன் அமைச்சகம்

மத்திய அரசின் ட்விட்டர் கணக்கில் பெரியாரை பாராட்டி பதிவிட்ட ட்வீட் அரைமணி நேரத்தில் நீக்கம் - சர்ச்சையில் சிக்கிய எல்.முருகன் அமைச்சகம்

Youtube Video

பெரியார் பிறந்தநாளில் அவரை பாராட்டி, டிவிட்டரில் பதிவிட்ட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அதனை சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் பெரியார். அவரைத் தலைவராகவும், அவர் சித்தாந்தத்தை கட்சியின் சிந்தாந்தமாகவும் கொண்ட கட்சிகள்தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவருகின்றன. பெரியாரை, பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்க்கும்போது தமிழ்நாட்டின் மிக முக்கியமான தலைவராக பெரியார் இன்று வரையில் இருந்துவருகிறார்.

    தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எண்ணற்ற சிலைகள் உள்ளன. இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மீண்டும் அமைந்துள்ள நிலையில் பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் சமூகநீதி உறுதி மொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, கள விளம்பரம் மற்றும் தொடர்பு பிரிவு அதன் டிவிட்டர் பக்கத்தில், முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்களில் அவர்களை பற்றிய நினைவுகளை பதிவிடுவது வழக்கம். அதன்படி, பெரியாரின் 143-வது பிறந்த நாள் குறித்து பாராட்டி பதிவிடப்பட்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இந்த பதிவு அரை மணி நேரத்திலேயே நீக்கப்பட்டது. தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, கள விளம்பரம் மற்றும் தொடர்பு பிரிவின், இதர தலைவர்களை பற்றிய பதிவு நீடிக்கும்போது பெரியார் குறித்த பதிவு மட்டும் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன், தற்போது தகவல் ஒலிபரப்புத்துறையின் இணையமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: