கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு: சூழலிலியல் ஆர்வலர்கள் கண்டனம்

இந்தியா முழுவதும் மொத்தம் 19,789 ச.கி.மீ. பரப்பளவு ஏலம் விடப்படுகிறது. இதில் காவிரிப்படுகையில் மட்டும் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்ப?

கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு: சூழலிலியல் ஆர்வலர்கள் கண்டனம்
ஹைட்ரோ கார்பன்
  • Share this:
கடலூரை ஒட்டிய கடற்கரையோரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் open acreage licensing என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும்.

இதன்கீழ் முதல் சுற்று ஏலத்தில், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை, வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் 5094 ச.கி.மீ பரப்பளவை ஏலத்தில் எடுத்தன. இரண்டாவது சுற்று ஏலத்தில், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 471 ச.கி.மீ பரப்பளவை ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமும், மூன்றாவது சுற்றில் நாகை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 1863 ச.கி.மீ பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன.


ஐந்தாம் சுற்று ஏல அறிவிப்பு ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் மொத்தம் 19,789 ச.கி.மீ பரப்பளவு ஏலம் விடப்படுகிறது. இதில் காவிரிப்படுகையில் மட்டும் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்பகுதியில் 4,064.22 ச.கி.மீ. பரப்பளவு ஏலத்தில் வழங்கப்பட இருக்கிறது.  இந்த ஏலத்திற்கான காலம் மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், "இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் கடற்பகுதியிலிருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் அற்ற கடற் பகுதியாக கிழக்குக் கடற்பகுதி மாறும். ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் அக்கடற்பகுதியில் மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் நடமாட அனுமதி இல்லை.

ஆகவே, மீனவர்கள் கடலில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். கடலில் அமைக்கப்படும் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுப்புக் குழாய்கள் நிலத்தடியில்பக்கவாட்டில் திருப்பப்பட்டு, ஒவ்வொரு திசையிலும் மூன்று கிலோமீட்டர் வரை செல்லும். ஆகவே ஒவ்வொரு ஹைட்ரோகார்பன் கிணறும் 36 சதுர கிலோ மீட்டருக்குக் குறையாமல் ஆதிக்கம் செலுத்தும். அப்பகுதி இரசாயன மயமாகும். மீன்பிடித்தொழில் நிரந்தரமாக முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.Also see:


 
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்