Home /News /tamil-nadu /

பிரதமர் கிராம சாலைகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய கனிமொழி- மத்திய அரசு பதில்

பிரதமர் கிராம சாலைகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய கனிமொழி- மத்திய அரசு பதில்

கனிமொழி

கனிமொழி

பிரதமர் கிராம சாலைத் திட்டத்தில் போடப்பட்ட சாலைகளின் பராமரிப்பு குறித்து கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

    பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட சாலைகள். கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளின் சேதம் பற்றிய மதிப்பீட்டை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறதா? அப்படி மேற்கொண்டிருந்தால் சேத மதிப்பீடு என்ன? மதிப்பீடு செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை?

    ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகளை பழுதுபார்க்க கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?" என்று மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி எழுத்துபூர்வமாக மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    கனிமொழி எம்.பியின் கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் என்பது கிராமப்புற இந்தியாவின் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்கான, அதன்மூலம் கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ஒரு சிறப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அனைத்து சாலைகளும் முதல் ஐந்தாண்டு காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அதற்குப் பிறகான சாலை பராமரிப்பு பணிகளுக்கான நிதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஊரக சாலை மேம்பாட்டு முகமைகளால் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தாய், மகள் இருவரும் போட்டி! உள்ளாட்சி தேர்தலில் சுவாரஸ்ய சம்பவம்



    இந்த நிலையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை பழுது பார்க்கவோ மறு நிர்மாணம் செய்யவோ ஒன்றிய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதுதொடர்பான அனைத்து பணிகளும் தொடர்புடைய மாநில அரசுகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்"என்று பதிலளித்திருக்கிறார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kanimozhi

    அடுத்த செய்தி