• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நவராத்திரிக்கு வண்ண உடைகள் அணிய கட்டாயப்படுத்தியது தவறுதான்- மதுரை எம்.பியிடம் யூனியன் வங்கி ஒப்புதல்

நவராத்திரிக்கு வண்ண உடைகள் அணிய கட்டாயப்படுத்தியது தவறுதான்- மதுரை எம்.பியிடம் யூனியன் வங்கி ஒப்புதல்

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

நவராத்திரிக்கு வண்ண உடைகள் அணிய கட்டாயப்படுத்தியது தவறுதான் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு யூனியன் வங்கி கடிதம் எழுதியுள்ளது.

  • Share this:
    மத்திய அரசின் பொதுத்துறை வங்கி யூனியன் வங்கி. இந்த வங்கியின் பொதுமேலாளர் நவராத்தி விழாவை ஒட்டி ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், ‘ நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து பணியாற்றும் இடத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அக்டோபர் 7ஆம் தேதியான வியாழனன்று மஞ்சள் வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அதற்கடுத்த நாள் பச்சை வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக க்ரே, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, ராயல் ப்ளூ, பிங்க், ஊதா ஆகிய வண்ண உடைகளை அணிந்து வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த விதிமுறை கடைப்பிடிக்காவிட்டால் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். தற்போது யூனியன் வங்கி மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நவராத்திரிக்கு 9 வகை கட்டாய உடை, ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு குறித்து…


    “தவறுதான். மதச்சார்பின்மைக்கு எதிரானதுதான். அதிகாரிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இனி அத்தகைய தவறு நடக்காது. யூனியன் வங்கி ஒப்புதல். எனது கடிதத்திற்கு யூனியன் வங்கி பொது மேலாளர் பதில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: