• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓர்பால் ஈர்ப்பாளர்களைத் துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் - உயர் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம்

ஓர்பால் ஈர்ப்பாளர்களைத் துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் - உயர் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ஓர்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் துன்புறுத்தப்படும் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

  • Share this:
    மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

    இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என தமிழக டிஜிபிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

    உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சமுதாயத்தை சார்ந்தவர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக விளக்கமளித்தார். இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் இது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: