ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவருவதற்கான தமிழ்நாட்டின் திட்டங்கள் சிறப்பு- யுனிசெஃப் பாராட்டு

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவருவதற்கான தமிழ்நாட்டின் திட்டங்கள் சிறப்பு- யுனிசெஃப் பாராட்டு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா பாதிப்புக்குப் பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்கள் "Game Changer" ஆக இருந்தது என UNICEF-ன் இந்தியா தலைவர் ஹுயூம் ஹி பன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தைகள் சந்தித்த சிக்கல்கள், காலநிலை மாற்றத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தரமற்ற கல்வி, சுகாதாரம் கிடைக்காத நிலை போன்ற இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசுடன் யூனிசெஃப் இந்தியா இணைந்து குழந்தைகள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த சமூக கொள்கை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக யூனிசெஃப் இந்தியா தலைவர் ஹுயூம் ஹி பன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ’கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு பாராட்டுக்கள். அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உள்ளது.

90% பேருக்கு முதல் தவணையும், 80% பேருக்கு 2-ம் தவணையும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 70% பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள். அரசின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வியறிவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கொரோனாவால் கற்றல் இழப்பை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் உளவியல் நலனுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

சமூகத்தால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு நல்வாழ்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு சார்ந்த, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை பள்ளிகள், கல்லூரிகளில் அமல்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வியில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் இடைவெளி வரக்கூடும். தமிழ்நாடு, கேரளா இடமிருந்து திட்டங்கள் எடுத்து மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பீட்டு பார்கிறோம்.

கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வர உலக நாடுகள் சவால்களை சந்தித்தது. ஆனால் கொரோனா பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழ்நாடு "Game Changer" ஆக இருந்தது. மதிய உணவு திட்டம் முதல் முதலில் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அதை மற்ற மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகின்றன.

மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம் போன்றவையால் தான் தமிழ்நாடு படிப்பறிவு உள்ள மாநிலமாக திகழ்கிறது என தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு- தீபா, தீபக்கைச் சேர்க்க உயர் நீதிமன்றம் அனுமதி

தொடர்ந்து பேசிய அவர், ’பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பருவநிலை மாறுபாடால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 600 மில்லியன் மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு, கிராம பஞ்சாயத்து & உள்ளாட்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு தலைமை செயலாளரை சந்தித்து UNICEF-யின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்க உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Government school, Tamil Nadu